ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கரப்பா மண்டலம் வேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் சாது ராமகிருஷ்ணா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலங்கி கிராமத்திற்கு வந்த ராமகிருஷ்ணா அங்கேயே தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

வேலங்கி கிராம மீன் மார்க்கெட் அருகில் சிறிய அறையில் தங்கி அருகிலுள்ள ஆசிரமத்தில் உணவருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று மாரடைப்பு காரணமாக ராமகிருஷ்ணா உயிரிழந்தார்.

இதனை அடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் உதவியுடன் தகனம் செய்தனர்.

அப்போது ராமகிருஷ்ணா வீட்டில் கிடைத்த 2 பையில் நூற்றுக்கணக்கான பாலிதீன் கவர்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் உள்ளூர் மக்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய எண்ணியும், முழுமையாக பணத்தை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பணத்தை பையில் போட்டு சீல் வைத்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். உயிரிழந்த யாசகர் வீட்டில் கட்டுகட்டாக பணம் இருந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Spyder

You missed