பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் செல்கிறது.

தமிழ் சீசனை பொறுத்தவரையில் கமல் தொகுத்து வழங்குவதால் இதற்கு எதிர்ப்பார்ப்பு மிக அதிகம். இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் என்கிற புதிய நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இதில், இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சிம்பு இறுதி வரை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், விக்ரம் படம் கமலுக்கு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை படம் பதிவு செய்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 6 ல் அனைவரையும் சந்திப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.

இதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார். இதில், போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளதாம்.

மேலும், இதில் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டு பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தொடர்ந்து, யாரெல்லாம் போட்டியாளர்களான கலந்து கொள்ள போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

By Spyder

You missed