பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி முதல் முதல் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா ?? வைரலாகும் புகைப்படம் இதோ !!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1st Runner up ஆக வந்தவர் பாலாஜி முருகதாஸ். பாலாஜி ஆளவந்தான் கமலஹாசன் போல தான் நல்லவரா கெட்டவரா என்பதை யாராலும் கூட முடியாது. ஆனால் பலரது பார்வைக்கு பாலாஜி நல்லவராக தெரிந்ததால் இரண்டாம் இடத்தை கொடுத்தார்கள்.

எந்த ஒரு அடையாளமுமே இல்லாத பாலாஜிக்கு 6.5 கோடி வாக்குகள் கிடைத்திருந்தது, அத்துடன் பாலாஜியை பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போனது. டைட்டில் வின்னர் ஆரியின் குழந்தை ரியா கூட பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டார்.

பாலாஜிக்கு டைட்டில் கொடுக்கவில்லை என சாப்பிடாமல் சில குழந்தைகள் அடம் பிடித்ததை அவர்களின் பெற்றோர்கள் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பாலாஜி இதனை எதிர்பார்க்கவில்லை, வெளியே வந்ததும் மக்கள் வெறுப்பார்கள் என்று நினைத்தவருக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.

இந்த நிலையில் வெளியே வந்த பாலாஜி முதல் முதலாக அவரை மிகவும் நேசிக்கும் அவரது குட்டீ ரசிகர்களை சந்தித்துள்ளார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடித்துப் போனதால் கள்ளம் இல்லாத குழந்தைகளையே பாலாஜி முதல் முதல் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.!!