பிக் பாஸ் சுரேஷின் மகன் யாருன்னு தெரியுமா ?? அட இவரா ?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்குல்ல !!

பிக் பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லாமல் போனாலும் அவ்வப்போது சில எபிசோடுகள் சுவாரஸ்யமாக செல்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒருவர்தான் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதான போட்டியாளராக இருந்தாலும் இளம் போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிக் பாஸில் விளையாடினார்.ஆனால் சில தினங்களுக்கு முன்பு வெளியேறினார்.

சுரேஷ் வெளியேறியது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்த ஒரு போட்டியாளர் வெளியேறியது அனைவர்க்கும் ஆச்சரியத்தை அளித்தது.

ஏற்கனவே சுரேஷ் சக்ரவர்த்தி பல திரைப்படங்களில் சில சிறிய வேடங்களில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.இந்தநிலையில் தற்போது அவருடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

நல்ல தோலுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அவரது மகனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகனா என வாயை பிளந்துள்ளார்கள்.