தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரிய வெற்றியை பெட்ரா ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ்.விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியானது முதல் இரண்டு சீசன்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இருந்தாலும் போகப்போக சுவாரஸ்யம் இல்லாமல் போனதால் அதீத வரவேற்பு இல்லாமல் போனது.தற்போது 5 சீசன்களை கடந்து விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கவுள்ளது.

4 சீசன்களை காட்டிலும் 5வது சீசன் சுவாரசியம் குறைந்துவிட்டதாகவும், எதிர்பார்த்த ரசிகர்களை கவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது ஆறாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேடல் மிகவும் மும்முரமாக நடந்துவருகிறது.

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி, பிரபல தொகுப்பாளினியான டிடி பெயரும் அடிபட்டு வருகிறதாக தெரிகிறது.விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Spyder

You missed