பிக் பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம் !! இறங்கி குத்தாட்டம் போட்ட நிஷா !! வைரல் வீடியோ இதோ !!

பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் வீட்டில் நடந்த விசேஷத்தில் கலந்து கொண்டதுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

ஜீ தமிழ் தொகுப்பாளினியான அர்ச்சான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார், வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் பல விமர்சனங்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டில் விசேஷத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அதாவது, அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவுக்கு அட்டகாசமாக வளைகாப்பு நிகழ்ச்சியை அர்ச்சனா நடத்தி உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்களான சோமசேகர், சம்யுக்தா, கேபி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

கூடிய சீக்கிரமே அர்ச்சனாவின் தங்கை அம்மாவாகப் போகும் சந்தோஷத்தால் அர்ச்சனா குடும்பமே சந்தோஷத்தில் உள்ளது.