விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக, ஹிந்தி தொலைக்காட்சியில் தான் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மக்கள் பலர், இது நம்முடைய கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. அது போக வெற்றிபெறாது என்று கூட பல கருத்துகளை கூறினர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக, பிரபல நடிகர்கள் பேசப்பட்டனர். அதிலும் இந்த நிகழ்ச்சியை, உலகநாயகனும், தற்போதைய அரசியல் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என்றதுமே, அந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை சிறிதும் குறைக்காத அளவுக்கு பிக்பாஸ் சீசன் 1 அமைந்தது. அதிலும் குறிப்பாக, அந்த சீசனில் கலந்துக் கொண்ட, நடிகை ஓவியா மற்றும், ஜல்லிக்கட்டு ஜூலி யின் பிரச்சனைகள் வைரலாக மக்கள் பத்தியில் பேசப்பட்டது. அது போக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, ஒரு நிகழ்ச்சியின் மூலம் சிலருக்கு ஆர்மி தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இந்த வகையில் கடந்த சீசனின் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் இருவர் தான். பிரபல செய்தி தொகுப்பாளினி அனிதா சம்பத் மற்றும் நிரூப். இவர்கள் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டனர்.

அதில் இவர்கள் இருவரைப் பற்றிய கருத்துகள் பல பரவி வந்திருந்தனர். சிறந்த அண்ணன் தங்கை என்று சிலரும். ஏன்பா, அண்ணன், தங்கச்சி பண்ற காரியம்மா இது? என பல மீம்ஸ்களும் வந்துக் கொண்டிருந்தனர். அதிலும், அனிதா சம்பத் வெளியேறி விட்டு, நிரூப் பை பார்க்க செல்லும் போது அவர்கள் காட்டிய பாசம் பல மீம்ஸ்களாக வைரலாக பரவியிருந்தது.

இந்நிலையில் அனிதா சம்பத் அவருடைய இன்ஸ்டாப் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில். ஏன் பசங்களுடைய நட்பு பெருசு? என்பதற்கான சில காரணங்களையும் அதில் சொல்லியிருக்கிறார். அந்த பதிவில், பிக்பாஸ் புகழ் பாலா மற்றும் நிரூப் அவர்களை டேக் செய்துள்ளார்.

அந்தப் புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

By marvel

You missed