பெங்களூருவில் உள்ள ஜே.பி. நகரை சேர்ந்தவர் நடிகை சுவாதி. சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலியால் பாதிக்கப்பட்ட சுவாதி ஹென்னூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அடுத்த சில தினங்களில் சுவாதியின் முகம் பெரியதாக வீங்கியதுடன், கடுமையான பல் வலியும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற சுவாதிக்கு மருத்துவர் வேறு சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.
இருப்பினும் அவரது முக வீக்கம் குறையாமல், முகத்தின் அமைப்பே வெகுவாக மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் முறையிட்டுள்ளார். அதற்கு ஒரு சில தினங்கள் வீக்கம் தானாக குறைந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.