நாளை ஏற்படும் சந்திர கிரகணம்…!! பே ரழிவி ற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் அந்த ராசி யார்னு தெரியுமா?

ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் நாளை, அதாவது ஜூலை 5 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த முழு நிலவு கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். அதாவது இந்த கிரகணத்தின் போது சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற பகுதி வழியாக செல்வதால், இது பலவீனமான நிழல் என்னும் பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான், இதைக் கண்டறிவது என்பது கடினம்.

இந்தியாவில் இந்த கிரகணம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.38 மணிக்கு தொடங்கி, அதன் உச்சக்கட்டம் காலை 9.59 மணிக்கு இருக்கும். அதோடு இந்த கிரகணம் காலை 11 மணியளவில் முடிவடையும். இந்த வான நிகழ்வு இந்தியாவில் பகல் பொழுதில் நடைபெறுவதால், இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. அதோடு நாளை குரு பூர்ணிமா இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் இரு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் என 3 கிரகணங்கள் வருவதால் உலகில் பல இயற்கைப் பே ரழிவு களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

ஜோதிட ரீதியாக, சந்திர கிரகணமும், பௌர்ணமியும் ஒன்றிணைந்தால், அது அனைத்து ராசிகளிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனுசு ராசியில் கிரகணம் நடைபெறுகிறது. தனுசு ராசியில் குரு பெயர்கிறது மற்றும் ராகு ஏற்கனவே அங்கு உள்ளது. ஆகவே தனுசு ராசியின் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இப்போது 2020 ஜூலை மாத சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசியிலும் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படப் போகிறது என்பதைக் காண்போம்..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! உங்கள் தொழில் வாழ்க்கை தொடர்பான முக்கிய வெளிப்பாடுகள் விரைவில் நடக்கும். இந்த கிரகணம் உங்களின் கடந்த காலம் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கானது என்பதை நீங்கள் நினைவுப்படுத்திப் பார்ப்பதற்கான நேரமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் அறிவைப் பெருக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இதற்காக நீங்கள் விலையுயர்ந்த செமினார்களில் கலந்து கொள்ளவோ அல்லது பயணிக்கவோ தேவையில்லை என்பதை இந்த கிரகணம் உங்களுக்கு நினைவூட்டும். உங்களின் முன்னோக்கை மாற்றுங்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த கிரகணத்தால் உங்களுக்குள் ஒரு ஆழமான மற்றும் தீவிரமான மாற்றத்தைக் காண்பீர்கள். இதனால் இந்த கிரகணத்திற்கு பிறகு, நீங்கள் மாறுபட்ட நபராக உணர்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! உங்கள் வாழ்க்கைத் துணை மீது உங்களின் விருப்பத்தை திணிக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் இந்த கிரகணம் உங்களின் நெருங்கிய உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே துணையுடன் பிரச்சனை ஏற்பட்டால், கண்டதை மனதில் நினைத்து குழப்பிக் கொள்வதைத் தவிர்த்து, எதையும் தெளிவாக சிந்தித்துப் பின் எந்த முடிவையும் எடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த கிரகணத்தால் எல்லா கட்டுப்பாடுகளிலிருந்தும் உங்களை விடுவிப்பதற்கான எளிய வழியை நீங்கள் காண்பீர்கள். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதும் அதிக கவனம் செலுத்துவீர்கள். சுருக்கமாக, ஆன்மீகம், உணர்ச்சி மற்றும் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! உங்களின் தனிப்பட்ட ஆர்வங்களைத் தொடர விரும்புவீர்கள். அதோடு சமூக சேவைக்கு சிறிது நேரம் கொடுங்கள். இந்த கிரகணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! உங்களுக்கு வேலை-வாழ்க்கை இரண்டுமே சமநிலையாக முன்னணியில் இருக்கும். கிரகணத்தின் போது உங்கள் உணர்ச்சிகளை கவனித்து பொறுமையாக எதையும் செய்யுங்கள். இதனால் வார இறுதி உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும்

மகரம்

மகர ராசிக்காரர்களே! நீங்கள் அனைத்துமே உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த கிரகணம் உங்களை சற்று பதற வைக்கும். ஆகவே பதறாமல் பொறுமையாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! கிரகணத்தால் நீங்கள் உங்களின் சில கடமைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் சூழ்நிலை என்னவென்று கவனித்து பின்னரே எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! நீங்கள் இதுவரை உங்களுக்குள்ளேயே பல கேள்விகளைக் கேட்கலாம். இந்த வார இறுதி கிரகணம் என்பதால், உங்களின் உணர்ச்சி ஆற்றல், உங்களை ஆழமாக சிந்திக்க வைக்கும். ஆனால் இவ்வளவு சிந்தனை அநாவசியமானது என்பதை நீங்களே பின்பு உணர்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! கிரகணத்தின் போது நன்கு ஓய்வு எடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேலை செய்ய வேண்டுமென்ற ஆவல் மனதில் எழலாம். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் மீது கவனம் செலுத்துவதே நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே! உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். இந்த கிரகணத்தால், உங்களின் சமூக வாழ்க்கை பாதிக்கக்கூடும். மேலும் உங்களை அறியாமலேயே நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept