தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் புகழ் போலவே தொகுப்பாளினிகளுக்கும் ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.அந்தவகையில் மிக முக்கியமான ஒரு தொகுப்பாளினியாக இருப்பவர் ப்ரியங்கா.திவ்யதர்ஷினிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினியாக பிரியங்கா இருக்கிறார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீசனை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர்தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த ஷோவில் தற்போது உலக இசை திருவிழா என்கிற பெயரில் வெளிநாட்டில் இருந்து கலைஞர்கள் வந்திருக்கிறார்கள்.

அதில் மிகா என்ற பெண்ணிடம் மாகாபா ஆனந்த் காமெடியாக பேசுகிறார். இனிமேல் ஆங்கர் பிகா (பிரியங்கா) இல்லை மிகா தான் என கூறுகிறார்.

மாகாபா அப்படியே பேசிக்கொண்டிருக்க ‘நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்’ என பிரியங்கா கூறுவதும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

வீடியோ இதோ..

By Spyder

You missed