ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் மஹா திரைப்படம் வெளிவந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா தோல்வியை தழுவியுள்ளது. மஹா திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிகரும், ஹன்சிகாவின் முன்னாள் காதலருமான சிம்பு நடித்திருந்தார்.

சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல், திருமண பேச்சு வரை சென்று நின்றுபோனது. இதன்பின், ஹன்சிகாவின் திருமணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். பிரபல அரசியல்வாதியின் மகனை தான், நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போவதாக திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஆனால், மாப்பிள்ளையின் பெயர் இதுவரை வெளிவரவில்லை. விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாகவும் தகவல் கூறுகின்றனர்.

ஆனால், இதுகுறித்து ஹன்சிகா இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By Spyder