இலங்கையில் செய்தி தொகுப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் வீழ்ந்த இவர் தற்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா. ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.

இந்நிலையில் படவாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா மீண்டும் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.’

தற்போது லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீப நாட்களாக தனது வலைத்தள பக்கத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போதும் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக லொஸ்லியாவின் அழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது. தற்போதும் லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உள்ளே வந்த அவரது தங்கை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்ததுடன், உடல் எடையும் கூடி தனது அக்காவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

By Spyder

You missed