நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பே காலடி எடுத்து வைத்தவர். மாடலிங் துறையில் அதிக அக்கறை கொண்ட இவர் தமிழில் இதுவரை சில படங்களே நடித்துள்ளார்.
அதிலும் ஒருசில படங்கள் சில மோசமான கதைக்களததை கொண்டது என்றே கூறலாம். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டி போட்டிபோட்டார்.
அதன்பிறகு பெரிய அளவில் சினிமாவில் வலம் வருவார் என பார்த்தால் பெரிய விபத்து ஏற்பட அவரது வாழ்க்கையே மாறியது. பல போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா தேம்பி தேம்பி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட யாஷிகாவிற்கு என்ன ஆனது, ஏன் இப்படி அழுகிறார் என கமெண்ட் செய்தனர்.
பின்பு தான் தெரிகிறது அவர் இன்ஸ்டா ரீல் வீடியோ செய்திருக்கிறார்.
View this post on Instagram