90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள திரிஷா சில காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் தன் மார்க்கெட்டை இழந்தார். தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்று ஏமாற்றமடைந்தார்.

இதனால் சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் போனது. தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார்.

மேலும், மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் தனுஷுடன் எப்போது கொடி படத்தில் நெகட்டிங் ரோலில் நடித்தாரோ அப்போது விட்டது வாய்ப்பு.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மொத்த பேரையும் டேமேஜ் செய்து கொண்டார் திரிஷா. அப்படத்தில் எப்படி அரசியல் ஆசை வந்து உயிரையே விட்டாரோ, அதேபோல் ரியல் வாழ்க்கையில் அரசியலில் நுழைய காத்திருக்கிறாராம்.

குஷ்பு, ரோஜா உள்ளிட்ட முன்னணி நடிகைகளாக இருக்கும் போது அரசியலில் குதித்த சம்பவம் தன் தற்போது திரிஷாவையும் இழுத்துள்ளது. விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும் கூறப்படுகிறது.

By Spyder

You missed