தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும், குழந்தைகள் இருவருமே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
மகள் தியா தற்போது 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.தியா பெற்றிருக்கும் மதிப்பெண்கள் விவரம் இதோ
தமிழ் – 95 மதிப்பெண்
ஆங்கிலம் – 99 மதிப்பெண்
கணிதம் – 100 மதிப்பெண்ணு
அறிவியல் – 98 மதிப்பெண்
சமூக அறிவியல் – 95 மதிப்பெண்
என அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பதாக தகவல் பரவி வருகிறது.இதைப்பார்த்த சூர்யா மிகவும் சந்தோசமாக உள்ளாராம். இந்த மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ தகவலாக சூர்யா தரப்பு வெளியிடவில்லை, ஆனாலும் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.