நடிகர் விஜயின் பாடலுக்கு பட்டையை கிளப்பிய வடிவேலு !! மில்லியன் பேரை ரசிக்க வைத்த வைரல் காட்சி !!

சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாவது என்பது தற்போது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.இன்னும் சொல்ல வேண்டுமேன்றால் நிறைய வீடியோக்கள் தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் “வாத்தி கமிங்..” பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடுவது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் விஜய் நடித்து வெளியான பிகில் படம் வசூலில் சாதனை படைத்து வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில் இந்த பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போன்ற மீம் ஒன்றை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.