நடிகர் பிரபுதேவா திடீர் ரகசிய மறுமணம் !! பெண் யார் தெரியுமா ?? முதல்முறையாக வெளியிட்ட அண்ணன் ராஜுசுந்தரம் !!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக விளங்குபவர் பிரபுதேவா.நடன இயக்குனராக அறிமுகமான இவர் தனது தேர்ந்த நடிப்பினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனால் அவருக்கு அதிக படங்கள் வந்தது.முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் ராமலதா என்ற பெண்ணை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.பின்னர் 2009 ஆம் வருடம் நடிகை நயன்தாராவுடன் காதல் வசப்பட்டு லிவிங் டுகெதரில் இருந்தது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

இந்த விவகாரத்தால் அவருக்கும் மனைவிக்கும் பிரச்சனை வந்து விவாகரத்து ஆனது.பின்னர் நயன்தாராஉடனான தொடர்பும் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணை இவர் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின.அனால் எந்த விஷயமும் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது பிரபுதேவாவின் அன்னான் ராஜுசுந்தரம் அந்த விஷயத்தை உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் மருத்துவர் ஹிமாமி என்பவருடன் திருமணம் முடித்துள்ளார் பிரபுதேவா.இந்த செய்தி இப்போதுதான் வெளிவந்துள்ளது.சென்னையில் உள்ள பிரபுதேவா வீட்டில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிப்பதாக ராஜூசுந்தரம் கூறியுள்ளார்.