தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தானம். ஹூரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

அண்மையில், இவரது நடிப்பில் குலுகுலு போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது அவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் சமீபத்தில் கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கிழக்கு கடற்கரை சாலை கருவடிகுப்பம் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலுக்கு தனது மகனுடன் சென்று தரிசனம் செய்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சந்தானம் மகனா இது.? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

By Spyder

You missed