தற்போதைய நிலையில் இணையத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது நம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்த லெஜெண்ட் திரைப்படம்தான்.

சரவணன் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிக்க துவங்கினார்.

விளம்பரப்படங்களில் மட்டும் நடித்துவந்த சரவணன் படத்தில் நடிக்கப்போவதாக கடந்த வருடம் தகவல்கள் வெளியாகின.

ஆரம்பம் முதலே மக்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டது.கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பாக்ஸ் ஆபிசில் மட்டுமே இதுவரை சுமார் ரூ. 7.7 கோடி வரை வசூல் எட்டியுள்ளது.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜண்ட் சரவணனை தொடர்ந்து பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண் குமாரும் விரைவில் ஹீரோவாக நடிக்கவரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் தமிழில் உள்ள டாப் ஹீரோயின் ஒருவர் நடிக்கப்போவதாக தெரிகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Spyder

You missed