தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதன் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் எல்லோரும் காத்து கொண்டிருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதேபோல் நாளை மறுநாள் விக்ரமின் மற்றொரு படமான கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். விக்ரமின் உடல் நிலை பற்றிய முழு விவரங்கள் விரைவில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By marvel

You missed