திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்த சுகன்யாவிற்கு பிறந்த ஒரே மகள்... யார் தெரியுமா...? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!!

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இயக்குனர் பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்தார். இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இவரை எல்லோரும் லேடி கமல் ஹாசன் என்று பெயர் வைத்து அழைத்திருந்தார்கள். மேலும், இவர் கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார். அதோடு இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு.

தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் சுகன்யா நடித்திருந்தாலும், அவர் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜனி நடிக்கும் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா. மேலும், நடிகை சுகன்யா அவர்கள் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், சுகன்யாவின் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழாவிலும் பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். பின் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது நடிப்புத் திறமைக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா அவர்கள் ஒரு கட்டத்தில் என்ன ஆனார்? என்று யாருக்கும் தெரியவில்லை.

பின் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சுகன்யா அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்கள் இவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். திருமணமான ஓராண்டிலேயே சுகன்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடினார். பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்துச் சென்றது இல்லை.

சிறிது காலம் அவரைக் குறித்து எந்த செய்திகளும் வராமல் இருந்தது. சினிமாவின் சாயமே படாமல் சுகன்யா அவருடைய மகளை தனிப்பட்ட முறையில் வளர்த்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவருடைய தனிப்பட்ட தகவலைக் கூட இதுவரை வெளிப்படையாக சுகன்யா தெரிவதில்லை. தற்போது சமீபத்தில் சுகன்யா தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதைப் பார்த்து பலரும் நடிகை சுகன்யாவின் மகளா இது! என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு உள்ளார்கள். பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை வெளிப்படையாக மீடியாவிற்கு காட்டுவதில்லை. அந்த வரிசையில் சுகன்யாவும் ஒருவராக இருந்தார். ஆனால், சுகன்யாவின் மகள் என்ன செய்கிறார்? சினிமாவில் நடிக்க விருப்பம் இருக்கிறதா? என்ற வேறு எந்த தகவலுமே தெரியவில்லை. இனிவரும் காலங்களில் சுகன்யா இது குறித்து சொல்வாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

By marvel

You missed