லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் எப்போது திருமணம், எப்போது திருமணம் என்று நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் கேட்ட நிலையில், கடந்த மாதம் 9ம் தேதி இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்று நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இவர்களின் திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாகவும் அறிவித்து இருந்தது. திருமணம் ஆன நாள் முதல் அன்றாடம் இவர்களை பற்றி பல சர்ச்சையான செய்திகளும், வதந்திகளும் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பின் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரிலும் வெளியானது. இந்த படத்தின் போதே சமந்தா மீது விக்கி அதிக அக்கறை எடுத்துக் கொண்டதாகவும், இதனால் நயன் அப்போதே செம்ம கடுப்பாகி அவரிடம் சண்டையிட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது நயன்தாராவும், ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதலில் நயனைத் தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க கூறப்பட்டதாம்.

ஆனால், அதன் பின் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க விக்கியும் சிபாரிசு செய்திருக்கிறாராம். இதை கேள்விப்பட்ட நயனும், விக்கி மீது கோபமடைந்து பிரச்சனை செய்துள்ளாராம். பழைய பிரச்சனையையும் இதையும் சேர்த்து நயன் விக்கியை ஒரு வழி பண்ணி விட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின் சண்டை வருவது சாதாரணமான ஒன்று என்றாலும், என்ன செய்வது என தெரியாமல் விக்கி விழி பிதுங்கி நிற்கிறாராம்.

By marvel

You missed