பொதுவாக சினிமாவை பொருத்தவரை அவ்வப்போது ஏராளமான நடிகர் நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் நடித்த பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு  வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி உள்ளார்கள். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து உள்ளவர்கள் கூட பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல்  ஒன்று சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் சென்று வருகின்றார்.

இல்லையென்றால் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விடுகின்றனர். அதுவும் இல்லையென்றால் சிலர் நடிப்பை ஓரம் கட்டி விட்டு தனது சொந்த தொழிலை கவனித்து  வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிவப்பதிகாரம்.

இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து  வருகின்றார். சில காலமாக இவர் சினிமா பக்கமே காணவில்லை. கடந்த, 10 வருடங்களாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார் நடிகை மம்தா  மோகன்தாஸ்.

இவர் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார். ஆனால் தற்போது எப்படி உள்ளார் என்று பலரும்  கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்ட  நிலையில் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தலையில் இருக்கும் முடி எல்லாம் எடுத்து மொட்டை அடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

By marvel

You missed