பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த டுவிஸ்ட்டுகளால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
குடும்பத்தலைவி ஒருத்தி தன் வீட்டில் சந்திக்கும் அவமானங்களையும், சமூகத்தில் ஜெயிக்க போராடும் நிலையையும் அழகாக உணர்த்தும் சீரியல் பாக்கியலட்சுமி.
இதில பாக்கியலட்சுமியின் கணவராக வரும் கோபி, தன்னுடைய கல்லூரி காதலை மீண்டும் துளிர்விட்டு வளர்க்க நினைக்கிறார்.
இவரது தொடர்பு அவரது அப்பா மற்றும் மகன் எழிலுக்கு தெரியவர கடுமையாக கண்டிக்கின்றனர்.ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அத்தனையும் சமாளித்து விடுகிறார் கோபி.
இந்நிலையில் கோபியின் அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட, உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.இதற்கிடையே அவருக்கு பிறந்தநாளும் வர, குடும்பமாக அனைவரையும் அழைத்து கொண்டாட நினைக்கின்றனர்.
இதில் ராதிகாவையும், பாக்கியா அழைத்துவிட கடுமையான கோபம் கொள்கிறார் கோபி, ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நெஞ்சுவலி வந்தது போல் துடிக்கிறார்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மருத்துவனைக்கு அழைத்து செல்கின்றனர்.அதன்பின் ராதிகாவோ, நீங்க ரெஸ்ட் எடுங்க கோபி என கூற கோபியின் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்!!!