கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணத்திற்கு, இரு வீட்டினரும் மண்டபத்தில் கூடி இருந்துள்ளனர்.

திருமண சடங்குகள் முடிந்த நிலையில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகளின் மயக்கத்தினை போக்கியுள்ளனர்.

மயக்கம் தெளிந்ததும் மணப்பெண், ‘எனக்கு இந்த திருமணம் வேண்டாம். என் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், மேற்கொண்டு விசாரணை செய்த போது, மணப்பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்வதுடன், பக்கத்து வீட்டு வாலிபரை குறித்த பெண் காதலிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பின்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டு மணமகன் வீட்டார் திருமணத்திற்கு செலவு செய்த 5 லட்சும் ரூபாயை மணமகள் வீட்டார் திரும்ப கொடுத்துள்ளதோடு, பிரச்சினையை சுமூகமாக முடித்துள்ளனர்.

By Spyder

You missed