7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் நயன்தாரா.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வந்துள்ள நிலையில் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றனர்.

திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துவிட்டால் படவாய்ப்புகள் குறைந்து விடும்.ஆனால் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது பல படங்களில் பிசியாக உள்ள நயன்தாராவுக்கு இப்போது பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவின் கல்யாணத்திற்கு பின் வெளியாகியிருக்கும் படம் தான் O2.

சுவாசக் கோளாறு உள்ள தன் மகனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் பஸ்ஸில் பயணம் செய்யும் நயன்தாரா என்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதே O2 படத்தின் கதை. O2 படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Spyder

You missed