பிரபல பாடகர் எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது.

செல்வராகவனை காதலித்து கடந்த 2006 இல் திருமணம் செய்துகொண்ட சோனியா பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது தனிமையில் இருக்கும் சோனியா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் எஸ்பிபி சரணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.இதனை பார்த்த ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார்.அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் உள்ளனர்.

அதோடு அதில் வெப் சீரிஸ் என்கிற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் எனவும் பதிவிட்டுள்ளார். இதன்படி ஏற்கனவே வைரலான புகைப்படங்கள் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஒற்றை புகைப்படத்தினால் பிரபல பாடகர் எஸ்பிபி சரண் ஒட்டு மொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

By Spyder

You missed