செம்பருத்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல காமெடி நடிகர்… யார் தெரியுமா...? பரபரப்பான க்ளைமேக்ஸும், கலகலப்பான காமெடியும் ஒன்னா சேருதுங்க! இனி ஒரே கலக்கல் தான்!!

செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1400 எபிசோடுகளை கடந்து படு விறுவிறுப்பாக கிளைமாக்ஸை நெருங்கி வரும் சீரியல் தான் செம்பருத்தி. ஷபானா, அக்னி, பிரியா ராமன், ஊர் வம்பு லட்சுமி என பலர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. தற்போது அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி வீட்டில் இருந்து வர புவனேஸ்வரி அகிலாண்டேஸ்வரியாக நடித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரியை விட்டு பிரிந்து சென்ற அவளது கணவராக என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர். சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரும் ரோபோ ஷங்கர் ஒரு கட்டத்தில் நான் தான் உன்னுடைய புருஷன் என சாமியார் கெட்டப்பை கலைக்க ஒன்றும் புரியாமல் இருக்கிறார் அகிலாண்டேஸ்வரி.

ரோபோ ஷங்கர் இது புவனேஸ்வரி இல்லை என தெரியாமல் புருஷனாக நெருங்கி நெருங்கி சென்று அன்பு தொல்லை செய்ய ஒருகட்டத்தில் புவனேஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல பின்னர் அகிலாண்டேஸ்வரி வீட்டுக்கு செல்கிறார் ரோபோ ஷங்கர். அங்கு இவர் அகிலாண்டேஸ்வரியாக நடிக்கும் புவனேஸ்வரியிடம் நெருக்கம் காட்ட இதனால் வீட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என காமெடி கலாட்டா எபிசோடுகளாக ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் வனஜாவுக்கும் ரோபோ ஷங்கர் லவ் டார்ச்சர் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளைமேக்ஸ் நெருங்குவதால் சீரியலை கலகலப்பாக கொண்டு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்த சீரியல் குழு இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. செம்பருத்தி சீரியலின் இந்த கலகலப்பான எபிசோடுகளை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

By marvel

You missed