சூர்யாவுக்கு என்னை விட இரண்டு வயசு அதிகம்..!! இருந்தாலும் அம்மாவாக நடித்தேன்..!! ஏன் தெரியுமா...? வருத்தத்துடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தற்போது தனுஷ், சிம்பு வரை சினிமாவில் எப்பொழுதும் நடிகர்கள் மட்டும் பல ஆண்டுகள் நடித்து வருகின்றார்கள். ஆனால், நடிகைகள் சில காலங்கள் மட்டும் கதாநாயகியாக நடித்து விட்டு அதன் பிறகு கூட நடித்த நடிகர்களுக்கு அம்மாவாகவோ, அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அது போலவே நடிகர் சூர்யாவை விட இரண்டு வயது குறைவான நடிகை ஒருவர் அவருக்கே அம்மாவாக  நடித்துள்ளார்.

அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவுக்கு சினிமாத் துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஒரு ஹீரோவாக அவருக்கு அங்கீகாரம் கொடுத்த படம் தான் நந்தா. அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா  இயக்கியுள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் நடிகை ராஜஸ்ரீ நடிகர் சூர்யாவின் அம்மாவாக  நடித்து இருப்பார்.

மேலும், நடிகை ராஜஸ்ரீ கருத்தம்மா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து நீண்ட  இடைவெளிக்கு பிறகு தற்பொழுது சின்ன துறையில் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி  ஒன்று கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய திரை வாழ்க்கை பற்றி பல சுவாரசியமான தகவல்களை அதில் பகிர்ந்துள்ளார்.

அதில் நந்தா திரைப்படத்தை பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தப் படத்தில் நடித்தது முதல் இன்று வரைக்கும் சூர்யாவும் நானும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றோம். மேலும், நடிகர் சூர்யா என்னைவிட இரண்டு வயது பெரியவர் என்றாலும் அவருக்கு நான் அம்மாவாக நடித்திருக்கின்றேன்.

நான் படப்பிடிப்பு போது நான் சூர்யாவை அண்ணா என்று கூப்பிட்டால் அப்படி கூப்பிடக் கூடாது  என்று சொல்வார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பாலா சாரை நான் சந்தித்த போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவரும் கண்டிப்பாக படம் பண்ணலாமே என்று கூறியதாக பல தகவல்களை நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்…

By marvel

You missed