முக்கியமான சீரியல்கள் பலவற்றில் நடித்து தற்போது மக்களிடையே பிரபலமாகி இருக்கும் நடிகை ஸ்ரீநிதி.இவர், சமீபத்தில் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தியநிலையில், பின்பு தான் மன அழுத்தத்தில் இருந்ததாக கண்ணீருடன் காணொளியினை வெளியிட்டார்.

பின்பு நடிகர் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் சிம்புவை திருமணம் செய்துகொள்ள கருத்து தெரிவித்த போது, தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக பதில் அளித்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஸ்ரீநிதி கூறுகையில், எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்!…

லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு. சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என அதில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க.

வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

By Spyder

You missed