குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன், இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரம் என பலவற்றில் நடித்து வருகின்றார். இவருடைய தந்தை ஒரு இந்தி நடிகர் ஆவார் அவருடைய பெயர் ராஜ் அர்ஜுன். இவர் பல இந்தி மொழி சினிமாக்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அர்ஜுன் அடுத்து தனது வசீகரமான போட்டோக்களை வெளியிட்டு ஹீரோயினாக ந டிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.இயக்குநர் பிரவால் ராமன் இயக்கத்தில் Bollywood-ல் வெளியான 404 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய பேபி சாரா.

இவர் 6 வயதுக்கு முன்பிருந்தே பாலிவுட்டில் குறும்படம், வணிக ரீதியிலான விளம்பரங்கள் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.இவர் தெய்வ திருமகள் படத்திற்கு பின்பு சில திரைப்படங்களான சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்கள் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இருந்துள்ளது.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் . ஹீரோயினாக நடிக்கும் முய ற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

இ ந்நிலையில் தற்போது இவர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது .

By Spyder

You missed