தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் டி. ராஜேந்தர்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.

ஆனாலும், தற்போது மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சை நல்லபடியாக முடிந்து, டி. ராஜேந்தர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

By Spyder

You missed