ஹிந்தியில் மிக பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி. அவர் தமிழிலும் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் பிரபுதேவா உடன் நடித்து இருக்கிறார்.அதுவுமில்லாமல் தமிழில் விஜயுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார்.
அவர் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ‘இந்தியன் போலீஸ் போர்ஸ்’-ல் நடித்து வருகிறார்.
அந்த தொடரில் சினிமாவுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளும் இருக்கின்றன. ஷில்பா ஷெட்டி சண்டை காட்சிகளில் நடித்து இருக்கும் வீடியோவும் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் சண்டை காட்சியில் அவர் நடிக்கும் போது நடத்த விபத்தில் கால் உடைந்து இருக்கிறது. அவர் வீல் சேரில் வந்த புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.