பல்வேறு மராத்தி சீரியல் தொடர்களிலும், சில படங்களிலும் நடித்து மிக பிரபலமானவர் அரவிந்த் தானு. 47 வயதாகும் அரவிந்த் தானு, மும்பையில் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திடீரென நெஞ்சு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மயங்கிய நிலையில் அரவிந்த் தானுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால், அரவிந்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இறுதியாக அவர் பெருமூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இந்த திடீர் மறைவு, மராத்தி சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் தானு, ‘சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த தொடரில் அரசியல்வாதியாகவும், கதாநாயகியின் தந்தையாகவும் நடித்து வந்தார். இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவர் மத்தியிலும் மிகவும் பாராட்டை குவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் அரவிந்த் தானு நடித்துள்ளார். அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களின் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து உள்ளார். குறிப்பாக லேக் மஜி லட்கி, சுக் மஞ்சே நக்கி கே அஸ்டா மற்றும் கிரைம் பேட்ரோல் ஆகிய தொலைக்காட்சி தொடர்கள் இவர் நடிப்பில் வெளிவந்து மிகவும் பிரபலமானவை.

மராத்தி திரைப்படமான ஏக் ஹோதா வால்யாவிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மரணம் தற்போது மராத்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

By Spyder

You missed