விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பின்னர் OTT தளத்தில் BB அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் நிறைவு பெற்றது.

ராஜு,பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய்,அபிஷேக், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, நாடியா, நமீதா போட்டியாளர்களுடன் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியது. இதில் விஜய் டிவி புகழ் ராஜு வெற்றி பெற்றார்.

இந்நிகழ்ச்சியில், அக்ஷரா, வருண் இருவரும் ஒரே நேரத்தில் எலிமினேட் ஆகினர். பின்னர் தற்போது நல்ல நண்பர்களாக உலா வருகின்றனர்.

சிலர், வருண் – அக்ஷ்ரா நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பது, போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது வருண் அக்ஷரா திருமண கோலத்தில் இருப்பது போன்ற விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா என வாயைப்பிளந்துள்ளனர்.ஆனால் இது ஒரு பத்திரிக்கை அட்டை படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

By Spyder

You missed