கடந்த ஜுன் 14ம் தேதி நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் நம்ம விஜயகாந்திற்கா இப்படி ஒரு நிலைமை விரல்கள் எடுக்கப்பட்டதா என வருத்தம் அடைந்து வருகிறார்கள்.