சர்ச்சை நாயகன் சிம்புக்கு அடுத்து ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பாருங்க !! புகைப்படங்கள் உள்ளே !!

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் ஹரிஷ் கல்யாண்.இவருக்கு அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.அதன்பிறகு தமிழ் பிக்பாசில் களம் புகுந்தார்.அவர் வாழ்க்கையை மாற்றிய ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் என்றே சொல்லலாம்.

யாருக்கும் தெரியாமல் இருந்த ஹரிஷ் கல்யாண் வெளியே தெரிய ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான்.அதிலும் ரைசாவுடன் இவர் அடித்த கூத்து மற்றும் இவர் செய்த ரொமான்ஸ் அவருக்கு பெரிய பிரபலமாக்கியது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவர் அதிகமான படங்களில் கமிட்டானார்.குறிப்பாக இவரும் ரைசாவும் இனைந்து நடித்து யுவன் சங்கர் ராஜ இசையில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

மேலும் இவர் நடிப்பில் தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்,தனுஷு ராசி நேயர்களே மேலும் தெலுங்கில் ஜெர்சி போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.அனைத்து படங்களும் நல்ல ஹிட் கொடுத்தன.தற்போது கையிலும் அதிகமான படங்கள் வைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இந்தநிலையில் தற்போது சமீபத்தில் நடிகர் சிம்பு அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சென்றுவந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த சிம்பு ஷூட்டிங் வரவில்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவர்மீது இருந்தது.

தற்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததை போல ஹரிஷ் கல்யாணும் மாலை போட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.