ஜி தமிழில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இதில் ஹீரோவாக முதலில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அதன் பின் சில பல காரணங்களால் அவர் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். அதற்கு பின்னும் சீரியல் பல சறுக்கல்களை தாண்டி, ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடியது.

சமீபத்தில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் என்பவருடன் செம்பருத்தி சீரியல் நடிகை சபானா காதல். என்றெல்லாம் பல வதந்திகள் ஓடிக்கொண்டிருந்தது. அதை அவர்களும், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, சபானா மற்றும் ஆர்யன், பெற்றோர் சம்மதம் இல்லாமல், ஹிந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். அதற்கு அவரின் நெருங்கிய தோழியான, ரேஷ்மா மற்றும் மதன் உதவினர் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், அவர்கள் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே இருவரும் பிரியப்போவதாக தகவல்கள் வெளிவந்தது.

அதற்கு நடிகை சபானா, அவரின் நிச்சயதார்த்த வீடியோ-வை பகிர்ந்து, அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் ஆர்யன் வெளியிட்ட பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது சமீபத்தில் கோபிநாத் கணவர்மார்கள் குழப்பத்தில் இருந்தால், அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது மனைவி தான். என ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ-வை தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்து என் வாழ்க்கையில் இப்படியான என் உறுதுணைதான் என் மனைவி என்றும், எனக்கு எல்லாமே நீதான். நீ என் மனைவியாக வந்ததற்கு மிக்க நன்றி. எனவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு இப்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது. அது போக இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

By marvel

You missed