சன் டிவியில் ரன் சீரியலில் வில்லனாக நடிக்கும் ருத்ரனுக்கு திருமணம் முடிந்தது !! மணமகள் புகைப்படம் இதோ !!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுவாக திருமணங்கள், சுப நிகழ்வுகள், துக்க காரியங்கள் போன்ற அனைத்தும் எளிமையாகவே நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரன் என்ற சீரியலில் வில்லனாக நடித்து வரும் விஜித் ருத்ரன் அவர்களுக்கு சமீபத்தில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. அவர் தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அது மட்டுமல்லாமல் அந்த பதிவல் ஆசீர்வாதங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் உங்களது வாழ்த்துக்கள் இந்த நாளை இன்னும் சிறப்பாக்கி உள்ளது உங்கள் அன்பை தொடர்ந்து வழங்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept