தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதை பலவே தற்போது யுதுபே சேனலில் நடித்து பிரபலமாவதும் வாடிக்கையான விஷயமாக ஆகிவிட்டது.சொல்லப்போனால் சினிமா பிரபலங்களை விட இவர்களுக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தவகையில் தமிழில் மிக முக்கியமான ஒரு சேனலாக இருப்பது பிளாக்ஷீப்.இந்த சேனல் மிகவும் முன்னாடியே தொடங்கப்பட்ட முன்னணி யுடியூப் சேனல்.இந்த நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் விக்னேஷ்காந்த்.இதன் மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி சினிமா வரை சென்றுவிட்டார்.
மேலும் தற்போது ஆர்.ஜே நந்தினி மற்றும் ஆர்ஜே விக்னேஷ் சேர்ந்து நடிக்கும், வெப்சீரிஸூகளுக்கு எல்லாம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இதில் ஆர்ஜே விக்னேஷ், யூடியூப்பை தாண்டி, சன்டிவியில் விஜே வாகவும், பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவருடைய இன்ஸ்டாப்பக்கத்தில், நிச்சயம் முடிந்துவிட்டது என புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் திருமணம் செய்யப்போகும் பெண்ணும் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் இதற்கு முன்னர் நடித்துள்ளாராம்.
நிச்சயதார்த்தம் மிக எளிமையான முறையில் நடந்ததாகவும், அதனால் பெரிதாக யாருக்கும் எதுவும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதைப்பார்த்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram