சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை...!! அட இவர் என்ன இப்படி செய்து விட்டார்..!! யார் தெரியுமா...? வைரலாகும் புகைப்படம்!!

பிரபல டிவியான கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற புதிய சீரியலில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றிப்பெற்று மக்கள் மனதில் வெண்ணிலாகவே நட்சத்திரா இடம் பிடித்தார். எப்போதும் நட்சத்திரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

நேற்று திடீரென நடிகை நட்சத்திரா, விஸ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நட்சத்திரா. தற்போது திருமண புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

By marvel