தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்கள் நடித்து வெளியான படம் தான் மாயி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை மின்னல் தீபா. மாயி படத்தில் இடம் பிடித்த காமெடி சீன் ஒன்றில் வடிவேலுவுக்கு பெண் பார்க்க செல்லும் போது “வாம்மா மின்னல்” என்ற அந்த ஒரு டயலாக் மூலம் பல மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை மின்னல் தீபா.

மாயி படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இவர் வெள்ளித்திரையில் கலக்கியதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த சீரியலான யாரடி நீ மோகினி மூலம் தனது நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

மேலும் தற்போது பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. அந்த வகையில் மின்னல் தீபா அவர்களுக்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் அவர்களது வீட்டில் சிம்பிள் ஆக நடந்து முடிந்தது. இந்நிலையில்  நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் எளிமையாக முடிந்துள்ளது.

மேலும் தனது திருமண புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருகிறார்கள். இது இவருக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவருக்கு 2013ஆம் ஆண்டு ரமேஷ் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.  ரமேஷ் மற்றும் தீபா அவர்களும் விவாகரத்து வாங்கி விட்டார்கள். தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel