90ஸ் கிட்ஸ் கள் பலரது கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சதா. தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார் அம்மணி. தெலுங்கில் இவர் நடித்த ஜெயம் திரைப்படம் ஹிட்டடித்தது.

அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார் இயக்குனர் ஜெயம் ராஜா. தன்னுடைய தம்பி ரவியை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திலும் நடிகை சதா ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவருடைய தோற்றமும் நடிப்பும் மிகவும் பிடித்த போனது. அதை தொடர்ந்து இயற்கை, வர்ணஜாலம், பிரியசகி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே கடைசியாக டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் சாலையோர விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம், அழுத்தமான கதையை கொண்டிருந்தாலும் பிட்டு படம் என்ற ரேஞ்சிலேயே இந்த படத்தின் விளம்பரம் இருந்ததால் இந்த படம் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை என்று கூறலாம். தற்போது தன்னுடைய இரண்டாவது சினிமா பயணத்திற்கு தயாராகியுள்ள இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றார்போல சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை சதா. தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், 20 வயசு குறைந்தது போல இருக்கிறது அந்நியன் படத்தில் பார்த்த அதே அழகு இப்போதும் இருக்கின்றது என்று வர்ணித்து வருகின்றார்கள்.

By marvel

You missed