பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் அவர் மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மூலமாக ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இனி என்னநடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நேற்று புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கோபியின் குடும்பத்தை பார்க்க ராதிகா கேட்கின்றார்.ஆனால் கோபி அதற்கு மறுக்கவே கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார் ராதிகா.

By Spyder