குரு பெயர்ச்சி 2020 : குரு பார்வை சஞ்சாரத்தினால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைய பேருக்கு இருக்கும். கோடீஸ்வர யோகம் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனிதர்கள் பிறக்கும் போதே கிரகங்களின் சஞ்சாரம், பார்வை ஒருவரின் ஜாதகத்தில் அமையும் விதத்தில் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். குருவின் பார்வை, சஞ்சாரம் அமைவதைப் பொருத்து ஒருவர் கோடீஸ்வர யோகம் பெறுகிறார்.

இந்த குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குரு பகவானின் பார்வை, சஞ்சாரத்தினால் ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் தரப்போகிறது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு உங்களுக்கு சில அதிர்ஷ்டங்களையும் முன்னோர்களின் ஆசிகளையும் வழங்குவார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருவினால் கடந்த ஓராண்டு காலமாக அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். தடைகள் அதிகம் ஏற்பட்டிருக்கும். இனி தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும். இது வரை இருந்த பணக் கஷ்டம் நீங்கி உங்கள் பொருளாதார நிலை மேம்படும். தடைகள் தவிடு பொடியாகும்.எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சொந்த வீடு, வாகனம் என சகல யோகங்களையும் உங்களுக்கு குரு பகவான் அள்ளித் தரப் போகிறார். குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே உங்களுக்கு சகலமும் யோகமாக அமையப் போகிறது. ஏழாம் வீட்டில் குருவும் சனியும் இணைந்திருப்பதால் குடும்பத்தில் கவனம் தேவை. காதல், திருமணம் தொழில் பார்ட்டனர்களிடம் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருப்பது அவசியம். பத்துக்கு பத்தாமிடம். தொழிலுக்கு தொழில் ஸ்தானம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் தீரும். குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.வேலை, தொழிலில் சிறப்படைவீர்கள். பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிகிறார். இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்ததாக அமைகிறது. ஐந்தாம் வீட்டில் சனியோடு குரு இணைவது ராஜயோகம். பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குரு உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். இதுவரை நீங்கள் சிலவகை தோஷங்களால் பல சிரமங்களை சந்தித்து வந்திருப்பீர்கள் அவை யாவும் இனி சந்தோஷமாக மாறப்போகின்றன. தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் மிக எளிதாக நடக்கப் போகின்றன. வேலை கிடைக்கும்.பதவி உயர்வு வரும் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வருமானம் வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது. வேலையில் உற்சாகத்தையும் உயரதிகாரிகளின் ஆதரவையும் குரு பெற்றுத்தருவார். திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமண வாய்ப்பும் தேடி வரும்

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே குரு பகவான் முதலில் அள்ளித் தரப் போவது உங்களுக்குத்தான். இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர்கள் ஆகப்போவது நிச்சயம். ஏற்கனவே சனிபகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இப்போது குரு பகவானும் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால் உங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். திடீர் ஆதாயங்களும், எதிர்பாராத பண வரவுகளும் கிடைக்கும். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிட்டும். வேலை விஷயத்தில் நீங்கள் எடுத்த காரியம் எல்லாம் ஜெயிக்கும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, மற்றும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. திருமண யோகம் கைகூடி வரும், வெற்றி மீது வெற்றி தேடி வரும், திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை கொடுத்து உங்களுடைய நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றித்தரப்போகிறார்.