குடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவங்கதானா ?? நம்பவே முடியல !! இவங்கள பார்த்தா அப்படியா இருக்கு ??

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு தற்போது சிறப்பாக விளையாடி வருபவர் தான் மாடலான பாலாஜி முருகதாஸ்.இவர், 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார்.

மேலும், இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். எதையும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கோபப்படுவார். பலர் இவரை விரும்பினாலும் சிலர் இவர் குறித்த மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையடுத்து, பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய புதிதில், டாஸ்க் ஒன்றில் தனது தாய் தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் எனவும், எனது அப்பா குடித்துவிட்டு இரவில் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி கண்கலங்கினார்.

மேலும், ஒரு குழந்தையை பெத்து வளர்க்க முடியவில்லை எனில் ஏன் குழந்தை பெத்துக்கணும் எனவும் உருக்கமாகப் பேசி அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

ஆனால், அப்பொழுதே பாலாஜி குறித்த பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் சிறு வயதில் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைக் கண்ட ரசிகர்கள் இவர்களைப் பார்த்தால் குடிக்கு அடிமை போல தெரியவில்லையே என கூறிவருகின்றனர். மேலும் பாலாஜி ஷோவில் பிரபலமாவதற்கு இப்படியெல்லாம் கூறியிருக்கலாம் என விமர்சனம் எழுந்து வருகின்றது.