குக் வித் கோமாளி வின்னர் கனிக்கு கிடைத்த பரிசுதொகை எவ்வளவு தெரியுமா ?? இத்தனை லட்சமா ?? வாயடைச்சு போவீங்க !!

நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த சீசனில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, புகழ், ஷிவாங்கி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின், இறுதிச்சுற்று தமிழ் புத்தாண்டு தினமான நேற்றைய தினத்தில் நடைபெறுகிறது. 5 மணிநேரம் ஓடிய அந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு கழித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, யாரும் எதிர்பாராத பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிலும், குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான் ஆன்லைன் மூலம், போட்டியாளர்களிடம் பேசியதோடு, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதே போல் சிம்பு, சந்தோஷ் நாராயணன், ரவுடி பேபி பாடகி தீ , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கினர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஃபைனலில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை நடிகை ஷகிலா பெற்றார். மூன்றாவது இடத்தை அஸ்வின் பெற்றார்.

அதே நேரத்தில், பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பாபா பாஸ்கர், முதல் மூன்று இடங்களுக்குள் வராதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனிடையே, டைட்டில் வின்னர் பட்டத்தை கை பற்றிய கனிக்கு பரிசாக ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பரிசும் அதுபோக சுமார் 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த குக் என்கிற கோப்பையையும் நடுவர்கள் வழங்கினார்கள்.