குக் வித் கோமாளி பைனலில் கண்கலங்கிய புகழ் !! அதுவும் யாருக்காக தெரியுமா ?? இவன்தான்யா மனுஷன் !!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றனர்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது, இதில் பிரபல போட்டியாளர் கனி குக் வித் கோமாளி டைட்டிலை வென்றார்.

அவரை தொடர்ந்து ஷகீலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர். அதுமட்டுமின்றி டாப் நடிகர் சிம்பு பைனலில் கலந்து கொண்டு இந்த விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோமாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது, சரத்திற்கு உழைப்பாளி என்ற விருதை அளித்திருந்தனர்.

அப்போது நெகிழ்ச்சில் அழுத சரத், இந்த அங்கீகாரம் தனக்கு மேலும் ஊக்கத்தை தருவதாகவும், “இன்னும் நிறைய செய்வேன்” என்றும் அழுது கொண்டே கூறினார்.

இதனால் எமோஷனல் ஆன புகழ் “சரத் எப்போதுமே அவரையே தாழ்த்தி அவரையே கலாய்த்து ஒரு கவுண்டர் போடச் சொல்லி எங்களிடம் சொல்லுவார். இப்படி தன்னை தாழ்த்திக் கொள்பவர்கள் எப்போதுமே உயர்வார்கள்” என அழுதுகொண்டே கூறினார்.