விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே எக்கசக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களை தொடர்ந்து தற்போது 3வது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் புதுப்புது கெட்டப்புடன் வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். ஸ்ருதிகா இந்த சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். கடந்த வாரம் ஸ்ருதிகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எதற்காக ஸ்ருதிகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஒரு வேளை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டாரா என ரசிகர்கள் பல கேள்விகள் கேட்டபடி இருந்தனர்.
அதற்கு ஸ்ருதிகா தற்போது தகுந்த விளக்கம் அளித்துள்ளார். குக் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொள்ள சூட்டிங்கிற்கு வந்து விட்டேன். ஆனால், எதர்ச்சையாக எனக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் என்னால் அந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்து கொள்ளவில்லை. பலரும் நான் எதற்காக நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளனர்.
ரசிகர்கள் பலரின் செய்தியைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி வந்துவிட்டது. என் மீது இவ்வளவு பேர் அக்கறையாக இருக்கிறார்கள் என்று நினைத்தேன். நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு உடம்பு சரியில்லாதது மட்டுமே காரணம். வேறு எதுவும் இல்லை கூறி எனக்கூறி ஒரு வீடியோ ஒன்றை அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.