விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கணவரை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளமல் இருந்த வருகிறார் பிரியங்கா.

ஏன், அவருடன் இருக்கும் புகைப்படங்களை கூட தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்வதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ‘பிரீஸ் டாஸ்கில்’ கூட பிரியங்காவின் கணவர் வரவில்லை. இதனால், இருவருக்கும் இடையே சண்டையா, இல்லை இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று பலரும் கேட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின், முதல் முறையாக லைவில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய பிரியங்கவிடம், உங்கள் கணவர் பிரவீனை பற்றி சொல்லுங்கள்? பிரவீன் எங்கே? என்று பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த பிரியங்கா, அடுத்த பதிவில் பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு பதிலையும் அவர் கூறவில்லை என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தனது தம்பிக்கு பிறந்த குழந்தை புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பிரியங்கா, அப்போது கூட தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், முதல் முறையாக தனது கணவரை பற்றிய கேள்விக்கு பிரியங்கா பதிலளித்துள்ளார். ‘திருமணத்திற்கு பின் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள்’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா ‘ உங்களை புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால், அனைத்தும் சாத்தியமாகும் ‘ என்று கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது, இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்களா என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், விவாகரத்து குறித்து எந்த ஒரு தகவலையும் பிரியங்கா வெளியிடவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.

By Spyder

You missed